Friday, September 1, 2023

என் வாழ்க்கையில் நான் கொண்டவை...

மிகச் சிறந்த தந்தை...
தேவையான திண்பண்டம்...
ஐந்து வயதில் எனது தொடை வரை நெல்வயல்...
நூற்றுகணக்கான மாடு... அதில் ஐம்பதுக்கேனும் தண்ணீர் காட்டுதல்...
புவரசம் பூ... அதன் இலை பீப்பி...
அழகான குளம்... அதில் நீச்சல்...
பயிற்றுவிக்க சொந்தங்கள்...
சாமிக்கு தாமரை பூ...

காலையில் தெளிவு நீர்...
கொஞசம் முல்லை பூ... பறித்தல்...
மீண்டும் நாடு பிடித்தல்...
புத்தகங்களோடு குசலம்...
நீண்ட நெடும் கனவுகள் ...
முந்திரி பழம்...
வலியோடு தாயின் தற்கொலை தடுத்தல்... அதனால்
ஊர் கொண்டாடல்...
பனை மர பாய்...
முற்றத்தில் உறக்கம் !

அழகான குடந்தை அதன் வீதிகள்....
நாகரிகம் படித்தல்... கொசுவினை உணர்தல்...
மகாமககுளம்... அடை சுற்றிய விமானங்கள்
அதில் கழுகு பார்த்து நிற்க்கும் கூட்டம்...
செயின் சோசப் பள்ளி... என் தந்தை அவரின் நட்புகள்...
சாயும் காலம் ஆட்டம்... கதை கேட்டல்..

வீதி மாற்றம் ...இருந்தும்...
சுகுவின் பாட்டியிடம் கதை கேட்டல்
மெல்ல திருடன் போலிஸ் , ஐஸ் பாய்... பம்பரம்
கிட்டிபுல்... கிரிக்கேட்...
சிறு சிறு வியாபரம்...
கொலு, ராட்டினம், சப்பரம் , தெப்பம்... அடடா  தேர்...
குடந்தையின் தெய்வங்கள்... அம்புவிடுதல் !

அகிலா பாட்டி சமையல்...
பெரியம்மாவின் அதட்டல்...
தெரு சொந்தங்கள்...
நல்ல நண்பர்கள் !
அடுத்த வீட்டு டிவி...
விடுமுறையில் கிராமம்...
கதையளக்க நான்... என் கதை கேட்க
ஒரு கூட்டம்... ! ஆட்டம் பாட்டம் !

வீடு மாற்றம்...
நெடுந்தொலைவு தொலைத்த நட்புகள் !
மீண்டு இணையும் ஞாயிறுகள் !
10ஆம் வகுப்பு +1  மற்றும் +2
கடும் உழைப்பு... எஞ்ஜினியரிங்
அலையாடும் கண்கள்...
அதில் அவள் கேசம்...  அந்த நடை !
கவிதைகள்...

பொன்னியின் செல்வன்...
திராவிட கழகம்...
பாலகுமாரன்...
நூலகம்... நூலகம்... நூலகம்...
பாட புத்தகங்கள் தவிர அனைத்தும்
எஞ்ஜினியரிங்க் தோல்விகள்,,,
துவளாத ரக்கிங்...
துவளாத மனது...!

மானம் போனாலும்...
ஆங்கிலம் வாரது இருப்பினும்
தமிழ் கொண்டு படைத்தவை அதிகம் !
பேச்சு போட்டி - பரிசுகள் வென்றதில்லை !
இன்னும் எத்தனையோ... ஆனால் தோல்விகள் மட்டுமெ !
ஆர்.இ.சி வரை... பெஸ்டம்பர்... அடடா... !
அது வேறு உலகம் !
என் கல்லுரி காலங்களில் மிக உன்னதமானவை
அவை மட்டுமே !

கல்லூரி காலங்கள்... அவை
அரியர்கள் சுமந்து நிற்க...
என் மீது ஆறு ஏழு பார்வைகள்...
என் அரியர்கள் மேல் பேச தடுத்தன... !

ஆனால் ஆனால்... அவற்றில் சில உறுதியாக...
சிலர் காதல் என் நட்பை தாண்ட நினைக்க...
பயம் கொண்டேன்...! பரிதவித்தேன்...!
ஏனேனில்...
கல்லூரி காலங்கள்... அவை
அரியர்கள் சுமந்து நிற்க...
என் மீது ஆறு ஏழு பார்வைகள்...
என் அரியர்கள் மேல் பேச தடுத்தன... !

காதல் வீழும் என நினைத்தேன்...
ஒருவருடம்... !
ஒருவருடம் கழித்து விடாப்பிடியாக‌
காதல் பூக்கும் என...
நினைக்க வில்லை !

பொய பேச கற்றேன்...
கவலையுற்றேன்...
நேர்மைகள் தவறினேன்...!
காதலில் முழுதும் வீழ்ந்தேன்!
புத்தகம் எழுதினேன் வயது 20 ;

சித்தன்ன வாசல்
குடுமியான் மலை
ஸ்ரீரெங்கம்
தஞ்சை...
முதல் முத்தம்...
அதுவோடு முடிந்தது காதல்!
வயது 23 ; அவள் மணமுடித்தாள் !
நான் ஏழையானேன் !

சுற்றம் நடந்து கொண்டிருந்தது !
நான் அழுது கொண்டிருந்தேன் !
சுற்றம் ஓட ஆரம்பித்தது !
நான்... கருகி போயிருந்தேன் !
நான் தேசங்கள் பல பார்க்கலானேன்...
பணியில் பதவியில் வேக மெடுத்தேன் !
நினைவுகள் அகலவேயில்லை !

நான்கு மொழிகள் பேசக்கற்றேன் !
அவள்  நினைவுகள் அகலவில்லை !
தந்தையிடம் முறையிட்டேன் !
நண்பர்களிடம் பின்னர்...
வழியில்லை என்றதும்...!
நான் வென்றபின் யாருமில்லை என்றதும்...
வெற்றி ருசியில்லை !

அது ஒரு மத்தியான நேரம்...
மே மாத சனிக்கிழமை...
அவளுக்கு நான் செய்த டெலிபோன்
என் மனம் மாற்றியது !
எங்கிருக்கிறாய் ?  எப்படி இருக்கிறாய் ? ( இது நான் )
நலமாய் இருக்கிறேன்...! ஒரு குட் நியுஸ் என்றால் அவள்!
சொல்லுங்க என்றேன்...
இரண்டாவது ஆண் குழவி என்றாள்...!
வாழ்த்துக்களோடு...!

என் தந்தைக்கு பச்சை கொடி காட்டினேன் !
திருமணம்...!  
வயது 27 ;
திருமணம் நடந்தேறியது !
வாழ்க்கை பறந்தோடுகிறது !

லேசாய் முன் செல்வோம்....
23 வயதில் அவள் நீங்கிய போது...
திருவண்ணாமலை
மலை மீது ஏறி இறங்கிய புத்தாயிரம் +புத்தாயிரத்து ஒன்றில்...
யோகியின் தீர்க்க தரிசனம் !

24 வயதில் துங்கபத்திரை,கோதாவரி,கங்கை
நதிக்கரைகள் என்னருகில்... தவறு...தவறு....
நான் அவர்கள் அருகில்...
நதிக்கரைகள் மடியில்!
கேரளமும் வயனாடும் முகிலும் அருவியும்...
மழையும் விளையாட்டும்...!
கடலும் அதன் அழகும்...!
வட நாட்டு குளிர்,
வயிர் தாங்கா உணவுகள்...
காதுகள் அறியா பாஷைகள்...
கலிங்கத்து கலை பொருட்கள்...
விசாகபட்டினமுமும் கேரளத்து பேக்கல் பீச்சும்
காபி தோட்டங்களும் தென்னங்கள்ளும்...
ஜார்கன்ட் மலை அடிவார பழங்குடிகள்...
நக்ஸலைட் பயங்கள்
பல தேசத்து அனுபவங்களும்...
27 ஆம்  வயதிற்குள்...

சென்னை என்னை வரவேற்றது...!



Thursday, May 14, 2020

பத்தினி கோட்டம்...

மேற் கண்ட தலைப்பு கொஞ்சம் சங்க காலத்தினோடு சம்பந்தப்ட்டது. சோழ சேர மற்றும் பாண்டியர்கள் விரும்பி வணங்கிய இறைவியாம் சிலம்புடைத்த கண்ணகியோடு   தொடர்புடையது.
   நான் இங்கு., இக் கட்டுரையில் வார்த்தைகளால் நிறைக்க வருவது சோழர்களின் குல தெய்வமாம் உறையூர் வெக்காளி அம்மன் பற்றிதான்.
   ஆயிரம் வருடத்து தேவதை அவள். சோழர்களின் முற்கால தலை நகரங்களில் ஒன்றான... உறையூர் குடி கொண்டு இருப்பவள். (பிற் கால தலைநகரே தஞ்சை)
  முற்காலம் தொட்டே நான் கடவுள் அல்லது தெய்வம் என்பது வெறும் சிலை / கல் என்பதை கொஞ்சம் ஏற்காதவன். கோயில் என்பது நினைவிடம், ஜீவ சமாதி , முன்னோர் உறைவிடம், மனித சக்தி இறையோடு தொடர்பு கொண்ட இடம்., இங்ஙனம் தான் என் உணர்வில் பதித்து வைத்து இருக்கிறேன்.
  என் உண‌ர்விற்க்கு இண‌ங்க‌... உறையூர் வெக்காளி அம்ம‌னை பார்த்த‌ மாத்திர‌த்தில் ஏதோ ம‌ன‌ம் லேசாய் இள‌கி போயிற்று. மேலும் மிக‌ நுண்ணிய‌ விட‌யங்க‌ள் கைவ‌ர‌ பெற்ற‌து போன்ற‌ உண‌ர்வு. வெக்காளி பற்றி அப்போதுதான் த‌க‌வ‌ல் தேட‌ ஆர‌ம்பித்தேன்... அத‌ன் விளைவாய்...!
 இனி அந்த‌ ஆயிர‌ம் வ‌ருட‌த்து தேவ‌தை பற்றி...
   ச‌ங்க‌ கால‌ அல‌ங்கார‌க‌ளான‌ இர‌ண்டு மூக்குத்திக‌ள்., காது குண்ட‌ல‌ங்க‌ள் , பழ‌மை தோற்ற‌த்திற்க்கான‌ அத்துனை விச‌யங்க‌ளும் தாயின் முகத்தில் சீரான களையோடு இழையாடும் புன்னகை.
   கோரை பற்க‌ள் இருந்தும் தெய்வாம்சம்...
  வ‌ல‌து கால் ம‌டித்து இட‌து கால் ஊன்றியிருக்கும் வீர‌ ஆச‌ன‌ம்...
போன்ற‌ ப‌ல‌ சிற‌ப்புக‌ள் இருகிறது.
   தேவதையின் பெருமையை ஊட‌க‌ங்க‌ளின் வ‌ழி அறிந்து கொள்ளுத‌ல் அறிவித்த‌ல்... என்ப‌து தனி விதம். இனி ஊடகங்கள் வாயிலாக அன்னையின் பெருமை.

 எனேனில் நான் கூட‌ ஏதாவ‌து கூடுத‌லாக‌ அல்ல‌து குறைவாக‌ சொல்ல‌க் கூடூம். அதாலால்...
தின‌ம‌ல‌ர் ....
   அன்னை பராசக்தியின் அவதாரங்களில் முக்கியமானது காளி அவதாரமாகும்.
 உறையூர் அம்மன் சன்னதியில் வடக்கு நோக்கிய யோக பீடத்தில் அமர்ந்து வெக்காளி அம்மன் கம்பீரமாக காட்சி தருகிறாள். ஒரு கரத்தில் திரிசூலம், ஒரு கரத்தில் உடுக்கை, மற்றொரு கரத்தில் பாசம், இன்னொரு கரத்தில் அட்சய பாத்திரம் என நான்கு கரங்களை கொண்டிருக்கிறாள்.
கழுத்தில் திருமாங்கல்யமும், முத்தாரம், அட்டிகை, தலையில் பொன்முடி, கையில் வளையல்கள் அணிந்திருக்கிறாள்.
பீடத்தில் வலது காலை மடித்தும், இடது காலை அசுரன் மீது பதியவைத்தும் அருள்பாலிக்கிறாள். இடுப்பில் யோக பட்டம் அணிந்திருக்கிறாள். இந்த கோயில் விமானம் இல்லாத ஒரு கோயிலாகும். வெக்காளி அம்மன் வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறாள்.
மேற்கூறை இல்லாத அம்மன் கோயில்களில், பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை அசுரன் மீது பதியுமாறு அமர்ந்திருப்பாள். ஆனால் வெக்காளி அம்மன் வலதுகாலை மடித்து இடதுகால் பாதத்தை அசுரன்மீது பதியவைத்திருப்பது அபூர்வ காட்சியாகும்.
தின‌ம‌ணி
    முற்காலச் சோழ வேந்தன் பெருங்கிள்ளி, திருச்சிராப்பள்ளி- உறையூரை தலைநகராகக் கொண்டு, கி.பி. 2ஆம் நூற்றாண்டில் ஆண்ட கால கட்டம்.... கோவலன் மனைவி கண்ணகி, தன் கணவன் கோவலன் வீண்பழியால் படுகொலை செய்யப் பெற்றதால் வெகுண்டெழுந்தாள். கோபக் கனலால் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆட்சி புரிந்த மதுரை மாநகரையே எரித்தாள்! இதனை இளங்கோ அடிகள் படைத்த சிலப்பதிகாரம் விவரிக்கின்றது.
சோழன் அமைத்த பத்தினிக் கோட்டம்
    கோபக் கனலுடன் காட்சி அளித்த பத்தினி தெய்வமாம் கண்ணகி தேவிக்கு முதன் முதலாக ஒரு கோயிலை, தன் தலைநகர் உறையூரிலேயே அமைத்தான் பெருங்கிள்ளிச் சோழன். கண்ணகி கோபக் கனலுடன், உக்கிரத்துடன் காணப்பட்டதால் கூரையோ, கோபுரமோ, விமானமோ இன்றி  வெட்ட வெளியிலேயே கோயில் அமைத்தான் அரசன். ஆம்! உறையூரில் வெட்ட வெளியிலேயே பெருங்கிள்ளிச் சோழன் அமைத்த பத்தினிக் கோட்டமே, பின்னாளில் வெட்ட வெளி வெக்காளி அம்மன் கோவிலாக விரிவாக்கம் பெற்றது என்றொரு கருத்து நிலவுகின்றது.
சோழன் பெருங்கிள்ளி அமைத்த பத்தினிக் கோட்டம், முதன் முதலாக அமைக்கப் பெற்ற வரலாற்றை, நெஞ்சையள்ளும் செஞ்சொல் சிலப்பதிகாரம் சிறப்பாகவே எடுத்துக் காட்டுகின்றது.
"அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி
கோழியகத்து எத்திறத்தானும்
வரம் தரும் இவளோர் பத்தினிக்
கடவுள் ஆகுமென, நங்கைக்குப்
பத்தினிக் கோட்டமும் அமைத்து நித்தம் விழா அணி நிகழ்வித்தோனே!' என்கிறார் இளங்கோவடிகள்.
   இதன் பொருள், "பாண்டியன் வெற்றிவேல் செழியன், கொங்கிளங் கோசர், இலங்கை வேந்தன் கயவாகு ஆகியோர் பத்தினித் தெய்வமாம் கண்ணகி தேவியை வழிபட்டு நலம் பெற்றனர் என்பதைக் கேள்விப்பட்டான் சோழன் பெருங்கிள்ளி. அப்போது உறையூரைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்டவன் அவ்வரசன்.
  பாடலில் இடம் பெறும் "கோழியகத்து' என்பது உறையூரையே குறிப்பிடும். உறையூருக்குக் கோழியூர், உறந்தை என வேறு பெயர்களும் உண்டு.
   இதனடிப்படையில் "வெக்காளி' அம்மனை கண்ணகியாகவும் சிலர் கருதுகின்றனர். எது எவ்வாறாயினும் தமிழகத்தில் "மாரியம்மன் வழிபாடு' தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது என்பதில்  ஐயம் ஏதும் இல்லை. உத்தம பத்தினிகளும், ஊரைக் காக்க உயிர் கொடுத்த வீர நங்கையரும்கூட அம்மனாகியிருப்பதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆயின் புராண அடிப்படையில், பரசுராமரின் தாய் ரேணுகா தேவியே முதலில் தோன்றிய மாரியம்மன் ஆவார்.   

தவத்திரு குன்றக்குடி அடிகளார் : \
கீழ்கண்டவாறு வியந்து பேசுகிறார்.
" மற்ற தேவிமார்கள் இடது காலை மடித்து, வலது கால் பாதம் கீழே பதியுமாறு அமர்ந்திருப்பார்கள். கால்மாறி ஆடிய கூத்தர் பெருமானைப் போல் வெக்காளியம்மன் வலது காலை மடித்து இடது கால் பாதத்தை அசுர சக்தியின் உடலில் பதிய வைத்திருக்கும் செய்தி உய்த்து உணர வேண்டிய செய்தி, அசுர சக்தியை அடக்க அபார சக்தி தேவை. ஆதலால் தத்துவப்படி பார்த்தால் இதுவே சரியான அமைப்பு. சிற்பி ஒருவன் அம்மையின் அனுபூதி பெற்று உலகமாதாவாகிய வெக்காளி அம்மன் சிலையைச் செதுக்கி இருக்க வேண்டும். இடது காலை மடித்து வலது காலை ஊன்றியிருப்பது வீர ஆசனம் எனப்படும். வலது காலை மடித்து இடது காலை ஊன்றியிருப்பது சுகாசனம் எனப்படும். சுகாசனத்தில் மங்களப் பலன்கள் மிக அதிகமாகக் கிடைக்கும். வீர ஆசனத்தில் கொடுமை, பகை முதலியன அழிப்பது அதிகமாகும் என்பர்.
   இங்கு ., நான் த‌ல‌ வ‌ர‌லாற்றை குறிப்பிட‌வில்லை. எதுவாயினும்... அருள் மிகு வெக்காளிய‌ம்ம‌னுக்கும் க‌ண்ண‌கிக்கும் மான‌ ஒரு தொட‌ர்பை லேசாய் வ‌லியுற‌த்த‌வே இக் க‌ட்டுரை.
   அத‌னினும் மிகையாய்... சோழ‌னை போல் இவ்விதாம‌ன‌ கோவிலை சேர.,பாண்டிய‌ ம‌ன்னர்களும் நிறுவியிருப்ப‌தாய் உண‌ர்கிறேன்.
   த‌க‌வ‌ல்க‌ள் தேடுவோம்.

வேறென்ன‌
ப‌கிர்வுக‌ள் தொட‌ரும்...
அன்புட‌ன்.,
பால‌.பார‌தி.
(Dated :  17th Sep 2011 ) 

பி.கு : வெக்காளி அம்ம‌னை முத‌ன் முத‌லில் ச‌ந்த‌ன‌ காப்பு அல‌ங்கார‌த்தில் த‌ரிசியுங்க‌ள்.கூட்ட‌மில்ல‌த‌ தின‌ங்க‌ளாக‌ அம‌ர்ந்து பார்த்து வாருங்க‌ள். நிச்ச‌ய‌ம் சில‌ ந‌ல்ல‌ தொட‌புக‌ள் புரிப‌டும்.

Monday, January 11, 2016

மீண்டும் தெறிக்கவிடலாமா ?

மீண்டும் தெறிக்கவிடலாமா ?


கிட்ட தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு...

மீண்டும் எழுத ஓர் ஆசை... நகர்வோம் இனி....

இன்னும் சில நாட்களில்... !

ஃபேஸ்புக் , வாட்ஸப்  என அழகு தலை முறை  களம் கண்டு கொண்டிருக்க இது ஏனாம்... என என் மனது கேள்விகள் கேட்பினும்...

உண்மையை உரக்க சொல்வோம் என்ற பதிலே மீண்டும் பொங்குகிறது.

2006 ஆம் ஆண்டுகளின் நண்பர்கள் மெல்ல விழிப்படைந்து  ஆர்குட்டில் தொலைத்த என்னை மீண்டும் பேஸ்புக்கில் தேடத் தொடங்கியிருப்பதும் இதற்க்கு காரணம் எனலாம்.

வாழ்க நண்பர்கள் மதிப்பீடுகள் ....

மீண்டும் எழுதுவோம். !

என்றேன்றும் அன்புடன்
பால.பாரதி

Tuesday, June 28, 2011

புகை பழக்கம்...

புகை பழக்கம்...

எப்படி என்னுள் நுழைந்தது என்ற காரணம் தேடி அலைகிறேன்.பெரும் பாலும் பல/சில தனிப்பட்ட காரணங்களுக்காக, காரணங்களை தவிர்ப்பது நல்லதுதான்.

எனினும் பொதுவாக :காதல் தோல்வி, தன்னை ஹீரோவாக‌ நிர்ணயித்து கொள்வதற்க்காக, சுற்றத்தின் வழக்கம் (தந்தை,உறவினர்கள்), ஒரு ஹீரோவை பின் பற்றி பழக்கத்தினை தொடர்வது ,தேர்வுகளில் தொடர் தோல்வி , மனிதனை முடக்கி போடும் தன்னம்பிக்கை சார்ந்த அடிகள் விழும் போது, போன்ற பல பல காரணங்கள் புகைபிடிக்க பலருக்கு ஆரம்ப காரணங்களாக இருக்கிறது.

புகை பழக்கம் ஆரம்பம் ஆனதும், புகைபிடிப்பதற்க்காக காரணங்களை தேட முயற்சிக்கிறது மனது.

சிறு தோல்விக்கும், மிகச் சிறய வெற்றிக்கும் , மிகச் சிறிய இழப்பிற்க்கும், சில பல காத்திருத்தல்களிலும் (பஸ்க்காக காத்திருத்தல்) காரணங்களை பெற்று கொண்டு புகைக்க கிளருகிறது மனது.ஏன் காரணங்களே இல்லாத போதும் நண்பர்களோடு ஏழாவது மாடியிலிருந்து படிகள் வழி இறங்கி வந்து புகைத்து விட்டு போன நிமிடங்கள் எனக்கு உண்டு.
இதை என்னவென்று சொல்ல.!!!

நல்லதற்க்கும் கெட்டதற்க்கும் தனிமைக்கும் பல நேர காத்திருத்தல்களிலும் துணையாய் அழகாய் மிக சிறந்த நண்பனாக இருந்ததது என்பதால் புகை பழக்த்தினை மிக அற்புத மான விஷயமாக நான் கருதிய நாட்கள் உண்டு.(ரொம்ம‌ம்ம‌ப‌ முக்கிய‌ம் ).

நல்ல நண்பர்களை வேதனையோடு பிரிவது வழக்கம். இந்த நண்பனை பல சோதனைகள் கடந்து பிரிந்தது மிக்க மகிழ்ச்சி.

இவ் விஷ‌ய‌த்தினை/பகிர்வை மிக‌‌ நேர்மையாக‌ கையாள‌ விரும்புகிறேன். மிக‌ மிக‌ நேர்மையுட‌ன் கையாளும் பொழுதே இந்த‌ ப‌கிர்வு ப‌ய‌ன்ப‌ட‌ கூடும்.

இதொ இங்கே புகையின் நீள‌ அக‌ல‌ங்க‌ளை குறிப்பிட்டு எழுத‌ முடியுமா தெரிய‌வில்லை.முய‌ற்சிக்கிறேன்.

புகை பழக்கம் எப்ப‌டி ஆர‌ம்பித்த்து ?

என‌து முத‌ல் சிக‌ரேட் அனுபவம் காலேஜில் ப‌ய‌ற்றுவிக்க‌ ப‌ட்ட‌து.

எந்த‌ ஒரு நிர்ப‌ந்த‌மும் இல்லாது (காரணங்கள்) முய‌ற்சி செய்ய‌ புகை க‌ன்ன‌ க‌துப்புகளை தண்டி செல்ல்லது நின்று விட எடுத்த‌ எடுப்பில் காலை உண‌வு முழுவ‌தும் வாமிட். (முதல் முயற்சி இது 99ம் ஆண்டு).

இர‌ண்டாவ‌து அனுப‌வ‌ம் எனை நோட்ட‌மிடும் க‌ல்லூரி இள‌ வ‌ட்ட‌ங்க‌ளுக்கு (ஆண்/பெண்)வில்ல‌னாக அல்லது ஹீரோவாக‌ காட்ட‌ எடுத்து கொண்ட‌ முய‌ற்சி.

மெல்ல‌ வேலை, ப‌டிப்பு சூழ‌ல்க‌ள் அத‌லால் புகையிட‌ம் மிக‌ நெருங்கி ப‌ழ‌க‌வில்லை.

2004 - ஆந்திர‌ இற‌ங்கிய‌ போது தான் என்னின் புகைப் பழக்கம் பிரொபொஷனல் ஆகி போனது.அல்லது சூழல் கார‌ண‌மாக‌ அதிக‌ சிக‌ரேட்கள் ப‌ய‌ன்ப‌டுத்த‌லானேன்.(இப்படி தான் பல பேர் தப்பிக்கிறாங்க, என்ன ஒரு டுபாக்கூர் ஆன்ஸர்).

விடாது க‌ருப்பு...

மெல்ல‌ அதிக‌ மான‌து சிக‌ரேட்டுக‌ள்.

ஒன்று மூன்றான‌து
மூன்று ஆறான‌து.
ஆறு ப‌த்தான‌து.
சில‌ நேர‌ம் ப‌தினைந்தினை தொட்டு பின்னோக்கி ந‌க‌ர்ந்த‌து.

ச‌ளி இல்லாத‌ நாட்களே இல்லை.
ஜ‌ல‌தோஷ‌ம் போல‌ லேசாய் ஒன்று குடையும்,குறையும் ஏறும்.

உணவு,தூக்க‌ம் த‌வ‌றிய‌ போதும் புகை மட்டும் த‌வ‌றாது, நாட்க‌ள் ந‌க‌ர்ந்த‌ன‌.
சிக‌ரேட்டோடு மாத‌ங்க‌ள் ப‌ய‌ணித்த‌ன‌.புகையோடு வ‌ருட‌ங்க‌ள் ஓடின‌.

நான் அதிக‌ சிக‌ரேட் குடிக்க‌ கார‌ணம் என்ன‌ ?

பொய் தகவல்கள் தான்.

சிக‌ரேட்டினால் உட‌ல் ந‌ல‌ம் கெடும். தெரிந்த‌ விச‌ய‌ம்.

எத்துனை நாளில் உடல் நலம் பாழாகும் என்ப‌து தான் மிக‌ முக்கிய‌ கேள்வி?

அந்த‌ கேள்விக்கு கிட்ட‌ த‌ட்ட‌ விடை கிடைத்த‌ போது தான் கூச்ச‌ம் விட்டு பயம் விட்டு என் புகை பழக்கம்...மீண்டு பயணித்தது.

கேர‌ள்த்தில் கிடைத்த‌ விடை : 2006 ஆம் ஆண்டு.எத்துனை சிகரேட் அடிச்சாலும் 40 அல்ல‌து 45 வ‌ய‌திற்க்கு பின்பே இது பிர‌ச்சினையினை ஏற்ப‌டுத்தும்.இப்போதிருந்து அல்ல‌.என்று சொன்ன‌வ‌ரை ம‌னம் ஆற‌ வாழ்த்திவிட்டு, ம‌ன‌ம் குதுக‌ல‌மாய் புகையை தொட்டது.

சொன்ன‌து ஒரு அறிவாளியோ அல்ல‌து முட்டாளோ என்ற அடிப்படை ஆராய்ச்சி கூட செய்யாது அவர் சொன்ன‌தை அப்ப‌டியே உள் வாங்கி தொட‌ர்ந்த‌து புகை பழக்கம்.என்ன‌ மாதிரி நேர‌ங்க‌ளில் புகைக்க‌ ஆர‌ம்பித்தேன் ?

அதித‌ டென்ஷ‌ன்
டி குடித்த‌ பின்பு
உண‌வ‌ருந்திய‌ பின்பு
உற‌ங்க‌ போகும் முன்
ப‌ல‌ நேர‌ம் காலை வேளைக‌ளில்
ப‌ணிக்க்கு செல்லும் முன்பு
ப‌ணி முடிந்த‌ பின்பு
ப‌ணி முடிக்காத‌ போதும்
காத்திருக்கும்‌ போது
கார்க‌ளில் அல்ல‌து டூ வில‌ரில் ப‌ய‌ணிக்க்கும் போது
இய‌ற்க்கை க‌ண்டு கொண்டே
மாடியில் நின்று
ந‌ண‌ப‌ர்க‌ளோடு
அலுவ‌ல‌க‌த்தில் ஸ்மோக்கிங் கிள‌ப்போடு (இதுக்கெல்லாமா கிள‌ப் ! ஆம்.பைட் ப‌ண்ணி ஸ்மோக்கிங் ஸோன் வாங்கிய‌து அடியேன்)

விடாது க‌ருப்பு...

எனது அலுவலக நண்பர்களில் சிலர் ( தம் அடிக்காத ந‌ல்ல‌வர்கள்‌) ம‌க்க‌ எப்படா இந்த சிகரேட்டை நிறுத்த‌ போற‌ என்று கேட்கும் பொழுது குறைச்சுட்ட‌ன்டா என்ற‌ பொய் சொல்லி நகர்ந்த்து உண்டு.

ச‌ரி நிறுத்தும் எண்ண‌ம் ஏன் தோன்றிய‌து ?

சிகெரெட் தொட்டால் விடுவ‌து க‌ஷ்ட‌ம்.ஏன்னா இது சீஃப். எங்கும் கிடைக்கும்.ம‌து அருந்த‌ ஒரு செட் அப் தேவை.எடுத்து காட்டாக‌ இடம் பொருள் ஏவல் என எல்லாவற்றையும் மது அருந்த கணக்கில் கொள்ள வேண்டும். சிகரேட்டுக்கு அது தேவையில்லை.அதை விட‌ ஒரு புர‌ஃபொச‌ன்ல் டைமிங் செட் ஆகியிருக்கும்.அதாவ‌து ஒன் ஹ‌வ‌ருக்கு ஒரு த‌ட‌வை ஸ்மோக் செய்ய் கிள‌ம்ப‌னும்ன்னு ம‌ன‌சு அல்ரெடி டிசைட் ப‌ண்ணி அசைன் ப‌ண்ணி வ‌ச்சிடும்.அது கேத்த மாதிரி அலாறம் வைத்து மனதை கிளறிவிடும். அத‌னால‌ உன்ன‌ல‌ சிக‌ரேட்டை விட‌ முடியாதுடா என்று என் உற‌வு சொல்ல‌...அவர் முன்பு அமைதியானேன்.

உள்ளுக்குள் அழன்று போனேன்.

அடுத்து...ஒரிஸ்ஸாவின் ஜார்க‌ன்ட் பார்ட‌ர்... ஒரு ஜீப்பில் ப‌தினாறு பேருக்கு மிகாம‌ல். சினிமாவில் காண்ப‌து போல் கோழியிலிருந்து மளிகை வரை எல்லாம் அந்த‌ ஜீப்புக்குள்.க‌ட‌வுள் புண்ணிய‌த்தில் என‌க்கும் ஜீப்பின் பின்புற‌ம் நான்கு பேர் சீட்டில் ஒன்று கிடைத்த‌து.அம‌ர்ந்தேன்.

ஒரு ஐந்தாறு கிலோ மீட்ட‌ர் க‌ட‌ந்த‌தும் அதில் ஒருவ‌ர் பீடியை ப‌ற்ற‌ வைக்க, ஜீப்பில் அத்துனை பேரும் நெளிந்தோம். அதை பொறுக்க‌ மாட்ட‌து த‌த்த‌ளித்தோம். மெல்ல‌ பேச்சு கொடுத்து அதை அணைக்க‌ சொன்னேன். என் சிக்ரேட் பாக்கேட் மொத்த‌மும் அவ‌ரிட‌ம் இற‌ங்கும் போது கொடுத்து விட்டு., ஹீரோ போல‌ சிக‌ரேட் அடிக்க‌ கூடாது என்ற முடிவுக்கு வ‌ந்தேன்.

ஒரிரு நாள் விர‌த்த‌திற்க்கு பீன் மீண்டும் புகையுட‌ன் ஐக்கிய‌ம். ( இதெல்லாம் அர‌சிய‌ல்ல‌ சக‌ஜ‌ம‌ம்ப்பா என்ற‌து ம‌ன‌து).

வ‌ய‌னாடு கேர‌ளாவின் க‌ட‌வுளின் தோட்ட‌ம் என்று அழைக்க‌ப்ப‌டும் மாவ‌ட்ட‌ம்.வ‌ருட‌த்தில் ஆறு ஏழு மாத‌ங்க‌ள் ம‌ழை பெய்ய‌ கூடிய‌ மாவ‌ட்ட‌ம்.ஜ‌ல‌தோஷ‌ம் பீடீத்த‌து எனில் விட‌ சில‌ ப‌ல‌ மாத‌ங்க‌ள் கூட‌ ஆகும். அத்த‌கை சூழ‌லில் என‌க்கும் ச‌ளி தொந்த‌ர‌வு.

புகையை விட‌ டாக்ட‌ர் வ‌லியுறுத்திய‌ வுட‌ன் வெளியில் வ‌ந்து இதுதான் என் வாழ்வில் க‌டைசி சிக‌ரேட் என‌ என‌க்கு நானே சொல்லி கொண்டு புகைத்தேன்.

மீண்டும் ஒரிரு நாள் விர‌த‌ம். பிறகென்ன அந்த ஒரிரு நாளுக்கு பின் மீண்டும் சிகரேட்.

விடாது க‌ருப்பு... விடாது க‌ருப்பு...

என்ன‌டா ப‌ண்ண‌லாம். இந்த‌ த‌ம் உடுற‌துக்கு...

இப்ப‌டியே அடிச்கிட்டு இருந்தா க‌ல்யாண‌ம் எப்ப‌டி ஆகும்?

எவ‌னும் பொன்னு கொடுக்க‌லேன்னா ?
இந்த‌ ப‌யமும் வந்தது...!!!

வந்ததும்...உட‌னே சுஜாதா ப‌ல‌குமார‌ன் போன்ற‌ எழுத்தாள‌ர்க‌ள் புகை ப‌ழ‌க்த்தினை எப்ப‌டி விட்டார்க‌ள் என‌ தேடி பிடித்து ப‌டிக்க‌லானேன்.

பால‌குமார‌னை ப‌டித்தால் ப‌ய‌முறுத்தினார்.சுஜாத‌வை ப‌டித்தால் குண்டக்க ம‌ண்ட‌க்க‌ மாதிரி இருந்தது.ரெண்டும் எனக்கு ஒர்க் அவுட் ஆக‌லை. (அவங்களுக்கு ஆகிருக்கு).

பால‌குமார‌ன் சொன்ன‌து என்ன‌ ?

ஒரு நாளைக்கு இர‌ண்டு சிக‌ரேட் புகைத்தால் கூட‌ இத‌ய‌ நோய்க‌ளுக்கு ஆட்ப‌ட‌ நேரிடும். பல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ புகைத்து வ‌ந்த‌ நான் ஹார்ட் பைபாஸ் ச‌ர்ஜ‌ரி செய்து கொண்டு ஆறு மாத‌ங்க‌ள் ப‌டுக்கையில் இருந்தேன். சில‌ லட்ச‌ங்க‌ளும் க‌ரைந்த‌து. உங்க‌ள் வாழ்வில் ஆறு மாதங்க‌ளை வெறுமே ப‌டுக்கை அல்ல‌து சிகிச்சையில் க‌ழிக்க‌ விரும்புகிறீர்க‌ளா ?என்று ஆர‌ம்பித்து... அவ‌ரின் சொல்லாட‌ல் அவ‌ர் புகையை விட்ட‌ வித‌ம் மீண்டும் என‌க்கு அவ‌ரை ஹீரோ அக்க்கிய‌து.

வேறென்ன்ன‌.... மீண்டும் சில‌ நாள் விர‌த‌ம்.

சுஜாதா சொன்ன‌து என்ன ?

சிக‌ரேட் விட‌ வேண்டுமெனில் கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌ம்தான். இருப்பினும் கீழ் வ‌ரும் முறை எனக்கு உத‌விய‌து என்றார். ( நானும் ரொம்ப‌ சீரியஸ்ஸா ப‌டிச்சேன்)

சிக‌ரேட் விட்டுட்டேன்.
சிக‌ரேட் விட்டுட்டேன்.
சிக‌ரேட் விட்டுட்டேன்-ன்னு

நீங்க‌ள் தினமும் பார்க்கும் அனைவ‌ரிட‌மும் சொல்லுங்க‌ள். வ‌ய‌து வித்தியாச‌ம் பார‌து அனைவ‌ரிட‌மும் சொல்லுங்க‌ள்.எதிர் வீட்டு குட்டி பைய‌ன், ஏன் ப‌க்க‌த்து விட்டு ந‌ன்றியுள்ள பிராணியிட‌ம் கூட‌ கூறுங்க‌ள் என்ற போது என் த‌லைக்கு மேல‌ ஒரு ப‌ல்பு எரிந்த‌து. ஒரு வேளை நீங்க மறந்து போய் சிகரேட் புகைக்க நினைத்தாலும் உங்கள் அருகில் உள்ள நபர்., நீங்க நிறுத்திட்டதா சொன்னிங்களே என்று கேட்க கூடும்.ஆதலால் நீங்கள் புகை பழக்த்தினை கைவிட முடியும் என்றார்.

அப்ப‌டியே பின் ப‌ற்றினேன்.
ஆன‌ முடிய‌ல‌.வ‌ழ‌க்க‌ம் போல‌ ரெண்டு நாள் விர‌த‌ம்.
அப்புற‌ம் அடுத்த‌ தெருவிற்க்கு போய் புகை ப‌ழக்க‌த்தை தொட‌ர்ந்தேன்.

இந்த‌ தெருவுல‌ அடிச்சாத‌ன‌ நீங்க‌ விட்டுட்டேன்னு/விட்டுட்டதா சொன்னிங்களேன்னு கேட்பதற்க்கு ஆள் இருக்கும்.வ‌ழிய‌ நேரிடும். (என்ன‌ ஒரு புத்திசாலித்தன‌ம் ? )என‌க்கு நானே ச‌மாத‌ன‌ம் செய்து கொண்டு... மெல்ல‌ அதே தெருவிலும் புகைக்க ஆரம்பித்தேன். சுஜாதா என‌க்கு ஹெல்ப் ப‌ண்ண‌ல-ன்னு நானே சொல்லிகிட்டு , என்னை நான் தேற்றி கொண்டேன்.

மீண்டும் புகை ப‌ழ‌க்கம்.

அதே தெருவில் இன்னும் சிலர் சீண்டிய பின்பு சில‌ நாட்க‌ள் க‌ழித்து தொந்த‌ரவு (சிகரேட் விட்டுட்டதா சொன்னிங்க ? என்ற தொந்தரவு)இன்றி தொட‌ர்ந்த‌து.

இங்கே ஒரு முக்கிய‌ விஷ‌ய‌ம் சுஜாதா இர‌ண்டு முறை பைபாஸ் செய்து கொண்ட‌வ‌ர்.பால‌குமார‌ன் ஒரு முறை. ( இருவ‌ருக்கும் புகை ப‌ழ‌க்க‌ம் இருந்த‌து) .

மேலும் சில‌ எழுத்தாள‌ர்க‌ள இப் ப‌ழ‌க்த்தினை விட‌ சொல்லி ப‌ய‌ முறுத்த‌ (அதில் காப் மேய‌ர் ஒருவ‌ர்) மெல்ல‌ த‌வித்தேன்.

விட‌ தீவிர‌மாக‌ முய‌ற்சிக்க்க்க்க்க்க்க்க்........க‌லானேன்.என‌ தீவிர‌ முய‌ற்சிக‌ள் ப‌ல‌ன் த‌ர‌வில்லை.

நான் சூழ‌ல் குறித்து கொஞ்சம் ஆவ‌ல் உள்ள‌வன் என்பதால்., ப‌ல‌ நேர‌ங்க‌ளில் பிள‌ஸ்டிக் பைக‌ளை கூட‌ த‌விர்ப்ப‌வ‌ன். அப்ப‌டி இருக்க‌ ந‌ண்ப‌ன் சொன்னான்... மாப்ள‌ நீ குடிக்கிற‌ சிக‌ரேட் ப‌ட் ( ப‌ஞ்சு ப‌குதி) ம‌க்குவ‌த‌ற்க்கு ஐம்ப‌துலிருந்து நூறு வ‌ருட‌ங்க‌ளாகும் என்றான்.

புகை ஒரு சூழ‌ல் கேடு என்று யாராவது சொல்லி இருந்தால் வாக‌ன‌ புகையை நான் கை காட்டி அது போல் இதுவும் என கைகட்டி இருந்திருக்க‌‌ கூடும். ஆனால் அந்த‌ சிக‌ரேட்டின் ப‌ஞ்சு ப‌குதி ப்ற்றி சொன்ன‌ போது மெல்ல‌ அதிர்ந்தேன்.முய‌ற்சிக‌ள் மும்ம‌ர‌மாயின‌. ஆனால் சிக‌ரேட்டுக‌ளின் எண்ணிக்கை குறைந்த‌ பாடில்லை.என்ன‌ செய்ய‌...!!!

வ‌ருட‌ங்க‌ள் ஓடின‌...
திரும‌ணமும் ஆன‌து...
குழ‌விக்கு த‌க‌ப்ப‌னும் ஆனேன்.

இய‌லாது போகுமோ என்றெண்ணிய‌ நிமிட‌ம்...
இய‌லாது போகுமோ என்றெண்ணிய‌ நிமிட‌ம்...

புகை நிறுத்த‌ சில‌ சுயிங்க‌ங்க‌ள் உள்ள‌ன‌ என‌ என் ந‌ண்ப‌ன் சொல்ல‌ முய‌ற்சித்தேன். ஒன்றுக்கும் பிடி கொடுக்காது அத‌ன் வ‌ழி ந‌க‌ர்ந்த‌து புகை. அது மிக பெரிய வேதனை.

இது போல் ஒரு முய‌ற்சி 2006 லும் செய்த்ததுண்டு. புகைக்கும் எண்ணம் ஏற்ப‌டும் பொழுது மிள‌கு ச‌ப்பிடுவ‌து ந‌ல்ல‌து என்ற‌ன‌ர். நிஜமாய் சில நாட்கள் பலன் தந்து அதுவும் வழிவிட்டது. என்க்கு எல்லாம் கை விட்டு போன‌து.

ச‌ரி எப்ப‌டி தான் நிறுத்தினேன் ?

ஒரு நாள் இர‌வு பெங்க‌ளூர் ப‌ய‌ணத்தில் இருந்து திரும்புகையில் என் ம‌ன‌திற்க்குள் ஒரு வெளிச்ச‌ம். அது இறையிட்ட‌ பிச்சை என‌ கொள்க‌.எந்த‌ ஒரு உணவும் வ‌லிய‌ சென்று ஊட்டும் பொழுது குழந்தைக‌ள் ஏற்ப‌தில்லை. எந்த‌ ஒரு உத‌வியும் வ‌லிய‌ சென்று செய்வ‌தில் பெரிதாய் ப‌ய‌னில்லை. எந்த‌ ஒரு இட‌த்திலும் நான் இன்னாருக்கு தெரிந்த‌ ந‌ப‌ர் என்று உர‌க்க‌ கூவுவ‌தில் ம‌ரியாதையில்லை.
சிக‌ரேட்டுக்கும் இதே வ‌ழியை பின்ப‌ற்றினேன்.

எப்ப‌டி ?

மெல்ல‌ வில‌குத‌ல்.
கோப‌மின்றி ந‌க‌ர்த‌ல்.
க‌ண்ணாடியில் க‌ல் எரியாது, காற்றினில் கைக‌ள் விரித்தல் போல.

இதுவே... இதை ச‌ரியாய் சொல்ல‌ வேண்டுமெனில்... திடீர் என்று ஏதோ ஒரு காலையில் சிக‌ரேட் தொடாதிர்க‌ள்.( இந்த டேட் லேர்ந்து விட போறேன்ங்கறது எல்லம் சரியான வழி அல்ல) மெல்ல‌ நேர‌த்தினை த‌ள்ளி போடுங்க‌ள்.பல் க‌டிக்காது, எரிந்து விழாது ,கோபப்ப‌டாது க‌ர்வ‌மின்றி மெல்ல‌ அந்த‌ நாளை ந‌க‌ர்த்துங்க‌ள். அது போல் ஒரு ஐந்தே நாட்க‌ள் உங்க‌ளால் ந‌க‌ர்த்த‌ முடியுமெனில் உங்க்ளால் புகையை விட‌ முடியும்.அல்லது விட்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.

ஐந்து நாட்க‌ள் என்ப‌து ஒரு க‌ணக்கு அவ்வ‌ளவே. சில‌ருக்கு குறைவான‌ நாட்க‌ள் கூட‌ போதுமான‌து.

க‌ட்டுப்பாடு என்ப‌து வேறு வில‌குத‌ல் என்ப‌து வேறு. ஒருவ‌ர் மீது கோப‌ம் கொண்டு தாக்காது விடுவ‌து க‌ட்டுப்பாடு.

க‌ட்டுப்பாடு என்ப‌து வேறு வில‌குத‌ல் என்ப‌து வேறு. ஒருவ‌ர் மீது கோப‌ம் கொண்டு அடிக்காம‌ல் விடுவ‌து க‌ட்டுப்பாடு.

வில‌குத‌ல் என்ப‌து...

போடா போடா‌... என்று பிர‌ச்சினைய‌ அங்கேயே விட்டுவிடுவ‌து.

வில‌குத‌ல் முக்கிய‌ம்.

"த‌ம் அடிக்க‌ கூடாது மாப்ள‌... கன்ட்ரோல‌ இருக்க‌னும் அஞ்சு நாள் இருந்துட்டா போதும் அப்புற‌ம் ந‌ம்ம‌ விட்ற‌லாம் " என்றால் கொஞ்சாம் க‌டின‌ம்.

தவறான வழிமுறையும் ஆகும்.அதற்க்கு ஐய்யப்ப பக்தர்கள் சாட்சி.

க‌ட்டுப‌டுத்த‌ப‌ட்ட‌ நீர் அணை திற‌ந்த‌தும் எப்ப‌டி குமுறி கொண்டு வெளி வ‌ருமோ அதுபோல் ஆக‌ கூடும்.

அமைதியாத‌ல் வேண்டும்.
அட‌க்குத‌ல் கூடாது.
தாண்டி போக‌ வேண்டும்.
சிக‌ரேட் ப‌ழ‌க்த்தினை கைவிடுங்க‌ள். (த‌ய‌வு செய்து நிறுத்த‌ முய‌ற்சிக்காதீர்க‌ள்)

வேறென்ன‌...

என்னேன்ன‌வோ செய்கிறோம்...

இதை செய்ய‌ முடியாதா என்ன‌ ?

சிக‌ரேட் ப‌ழ‌க்த்தினை கைவிட‌ எதாவ‌து உத‌வி தேவை எனில் என‌க்கு எழுதுங்க‌ள்.

என்றேன்றும் அன்புட‌ன்...

bharathi.spel@gmail.com

ப‌கிர்வுக‌ள் தொட‌ரும்....

குறிப்பு : மேல் குறிப்பிட்ட‌ எழுத்தாள‌ர் சுஜாதா வ‌ழிமுறை,சுயிங்க‌ம், மிள‌கு போன்ற‌வை கூட‌ புகை ப‌ழ‌க்த்தினை கைவிட‌ உத‌வி செய்யும்.மேலும் என் போன்ற‌ அனுப‌வ்ம் பெற்றோர் சொல்லும் யோச‌னைக‌ள் கூட‌ சிக‌ரேட்டை கைவிட‌ உத‌விய‌ளிக்க‌ கூடும்.உங்க‌ளின் யோச‌னைக‌ளும் வ‌ர‌வேற்க்க‌ ப‌டுகின்ற‌ன‌.

திருவையாறு...

திருவையாறு...

என்னை,என்னின் மனதை லேசாய் அசைத்து பார்த்த ஒரு பூமி.

கல்லணையோடு காவிரி பார்த்து கொண்டே அதன் சூழ் கிரமங்களை பார்த்து கொண்டே திருவையாறு அடையும் பட்ச்ச‌த்தில் ஒரு தெய்விக இயலபு மன‌தில் குடி கொள்வதுண்டு.

அது போலவே குடந்தையிலிருந்து காவிரிகரை ஓரமாகவே திருவையாறு அடையும் பொழுதும் ஏற்படுவது இறையின் கருணை.

திருவையாற்றின் சிறப்பை இசையியல் வல்லுனர்கள் வாயிலாக கேட்டு பார்க்க வேண்டும்.

எந்தோ மாகானு பாவலு...அந்தரிக்கி நமஸ்காரமு.

எத்துனையோ புண்ணிய‌ ம‌னித‌ர்க‌ள் வாழ்திருக்கிறார்க‌ள் அத்துனை பேருக்கும் என் வ‌ண‌க்க‌ங்க‌ள் என்ற‌ தியாக‌ராஜ‌ரின் ஜீவ‌ ச‌மாதி அமைந்த‌‌ இட‌ம்.

தெலுங்கு கீர்த்த‌னைக‌ள் (குறும் பாட‌ல்க‌ள்) ந‌ம‌க்கு புரிவ‌தில்லை. ஆனால் இசை ந‌ம‌க்கு ப‌ரிச்ச‌ய‌ம் தானே.சோக‌மும் ச‌ந்தோஷ‌மும் இசையோடு இய‌ங்குகையில் வாழ்கையை கொஞ்ச‌ம் அழ‌காய் மாற்றி வைக்கிற‌து தானே !!!

காவிரி க‌ரையில் வ‌ருடம்தோரும் தியாக‌ராஜ‌ரின் ஜீவ‌ சமாதியில் ஆராத‌னை விழா அற்புதாமாய் அர‌ங்கேறும். ம‌தப் பிணைப்பின்றி, சாதி வேறுபாடின்றி இசையோடு ச‌ம்ப‌ந்த‌ ப‌ட்ட‌ அனைவ‌ரும் அவ‌ர‌து ந‌டையில் அழ‌காய் அர‌ங்கேற்றும் அந்த‌ இசை நிக‌ழ்ச்சிக‌ளை காண க‌ண்கோடி வேண்டும்.கேட்க செவி நூறு வேண்டும்.

க‌ர்நாட‌க‌ இசை ப‌ற்றி சிறிதும் அறியாத‌ நான் கூட‌ அங்கு சிந்த‌னை செய‌ல் ஓட்ட‌ம் ஏதும் இன்றி அமைதியாய் அம‌ர்திருக்கிறேன்.

க‌ன்ன‌த்தில் நீர் வ‌ழிய‌ அந்த‌ ஆன‌ந்த‌ வைபவ‌த்தில் க‌ல‌ந்து க‌ரைந்திருக்கிறேன்.

தவில் வித்வான்க‌ள், நாத‌ஸ்வ‌ர‌ வித்வான்க‌ள் , வ‌ய‌லின் வித்த‌க‌ர்க‌ள், மேன்ட‌லின் வ‌ல்லுன‌ர்க‌ள் ,பாட‌க‌ர்க‌ள் ,ச‌ங்கித‌ ர‌சிக‌ர்க‌ள் இன்னும் எத்த‌னை எத்த‌னையோ மிக‌ முக்கிய‌ ந‌ப‌ர்க‌ள் அனைவ‌ரும் அக் குறிப்பிட்ட‌ நாட்க‌ளில் த‌ங்க‌ளின் ஆன்மிக‌ குருவிற்க்கு ( தியாக‌ராஜ‌ருக்கு) இசையை அர்ப‌னித்து செல்வ‌து இறை விருப்ப‌ம் போலும்.

இறை விருப்ப‌ம் இல்லாவிடில் என் போன்று சில‌ ப‌ல‌ க‌ண்க‌ளில் அந்த‌ ஆன‌ந்த‌ க‌ண்ணீர் ஏது ஏது !?!?.ம‌ட்டும‌ல்ல‌து நிக‌ழ்ச்சி ந‌டைபெறும் நாட்க‌ள் அல்லாது திருவையாறு ஒரு மிக‌ அமைதியான‌ ந‌க‌ர‌மாகி போகும். இதுவும் இறை விருப்ப‌ம் தானே.

ஒரு கால‌த்தில் மூப்ப‌னார் அவ‌ர்க‌ள் த‌லைமை ஏற்க‌ குன்ன‌குடி அவ‌ர்க‌ள் த‌லைமையில் அணிவ‌குக்கும் அந்த ச‌ங்கித‌ ப‌டை திருவையாற்றை உல‌க‌ அர‌ங்கில் நிறுத்தும்.

இன்றும் அவ‌ற்றிற்க்கு சிறு குறையும் இல்லை. அழ‌காய் ந‌ட‌ந்தேறும் வைப‌வ‌ம் மார்க‌ழி, தை குளிர் காவிரி ந‌தி நீரோடு இத‌மாய் நிறைக்கும்.

ச‌ ரி க‌ ம‌ ப‌ த‌ நி எனும் ஏழும் ஸ்வ‌ர‌ங்க‌ள் இவ‌ற்றில் மூன்றேனும் ஒரு ராக‌த்தில் அட‌ங்கியிருக்கும்.இந்த‌ ஏழு ஸ்வ‌ர‌ங்களை கொண்டு எத்துனை வித‌மான‌ அழ‌கிய‌லையும் சோக‌த்தினையும் அழ‌காய் வெளிப்ப‌டுத்த‌ தர‌ இது வ‌ரை முடிந்திருக்கிற‌து.

இசையுல‌க‌ம் ராஜ‌ஸ்தானி ,ஹின்துஸ்தானி என்று சொல்ல‌குடிய‌ இசையிய‌ல் ம‌ர‌புக‌ளிருந்து கூட‌ சில‌ அண்ணிய‌ ஸ்வ்ர‌ங்களை (ஏழு ஸ்வ‌ர‌ங்க‌ள் அல்லாது)கை கொண்டு இசை அமைத்திருக்கிற‌து.

ராக‌ம் என்ப‌து ஒரு பேஸ் அல்ல‌து வீடு என‌க் கொண்டால் தாளம் அத‌ன் இன்டீரிய‌ர் டிசைனாக‌ சொல்லாம். த‌ள‌த்தினை லேசாக‌ த‌வ‌றி இட்டால் கூட‌ ராக‌த்தின் அழகு கெட‌க்கூடு‌ம்.

இவை ந‌ம‌க்கு அத்துனை தூர‌ம் ப‌ரிச்ச‌ய‌மில்லை ஆதாலால் ஒரு சில‌ எடுத்து காட்டுக‌ள்.

ராக‌ம் ஹ‌ர‌ஹ‌ர‌ ப்ரியா :

பாட‌ல் : பூங்காற்று திரும்புமா ... ( முத‌ல் ம‌ரியாதை )பாட‌ல் : இளங்காற்று வீசுதே... (பிதாமகன் )தாள‌ம் ம‌ட்டும் லேசாய் வேறு ப‌ட்டு கிட‌க்கிற‌து.

மேலும்...

ஜனனி ஜனனி.... : ‍ கல்யாணி ராகம் (படம் : தாயே மூகாம்பிகை) அந்த

வானத்தை போல.... :கீரவானி (படம் : சின்ன கவுன்டர்)இன்னும் புரிவ‌த‌ற்க்காக‌

சொல்ல‌ வேண்டுமெனில்..." நல்ல‌ இருக்கியா மாப்ள‌... "

இதை நான் கேட்ப‌தற்க்கும் இன்னெருவ‌ர் கேட்ப‌தற்க்கும் உள்ள‌ வித்தியாச‌ம் தான்.

இசையின் இசை வேறு பாடே ராக‌மும் தாள‌மும்.

" ஸஸ ரி ஸஸ ரி கம‌ க‌ம‌ க‌ம... " என‌ ஸ்வ‌ர‌ங்ளை முன் பின் இட்டு இசையின் க‌த‌வுளை கற்ப‌னையோடு திற‌க்கிறார்க‌ள் இசை வ‌ல்லுன‌ர்க‌ள். இத‌னோடு தாள‌மும் , பாட‌ல் வ‌ரிக‌ளும் ச‌ரியாய் அமைந்து விடில் அழ‌காய் மாறுகிற‌து இசையின் கோட்டை.

இவையாவும் ஒரே இட‌த்தில் கண்டு க‌ளிப்ப‌து திருவையாற்றில் ம‌ட்டுமே என‌ப‌து என் க‌ருத்து.

இசை ர‌சிக‌ர்க‌ள் வாழ்வில் ஒரு தட‌வையாவ‌து இருந்து அனுப‌விக்க‌ வேண்டிய‌ இட‌ம். செல்போன்,லாப்டாப்,ஐபேட் என எல்லாவற்றையும் ஸ்விட்சாப் செய்து ஒரிரு நாடக‌ளாவ‌து போய் வ‌ர‌ வேண்டிய‌ இட‌ம்.

வாய்ப்பு வ‌ச‌திக‌ள் கை கூடுமெனில் இசையை இசை குருவின் (தியாகராஜர்) அருகில் அம‌ர்ந்து க‌ண்டுக‌ளித்து வாருங்க‌ள்.

கீர‌வானியோ,க‌ல்யாணியோ ,ச‌க்ர‌வாக‌மோ, காப்பியோ , அமிர்த‌வ‌ர்ஷினியோ ,சிந்து பைர‌வியோ , சிவ‌ர‌ஞ்ச‌னியோ , ஸ்ரி ர‌ஞ்ச‌னியோ ,ஷ‌ண்முக‌ ப்ரியாவோ புரியாம‌ல் போக‌ கூடும். ஆனால் அந்த‌ இசை வ‌டிவ‌ங்க‌ளை இன்ன‌தென்று தெரியாம‌ல் கூட‌ கேட்டு விட்டு வாருங்க‌ள். த‌வ‌றில்லை.

இது ஒரு வாய்ப்பு, அதுவும் த‌மிழக‌த்தில். ம‌னதின் அழுக்கு துவ‌ர‌ங்க‌ளை துடைத்து அனுப்பும் துய‌ விஷ‌ய‌ங்க‌ளில் இசையும் ஒன்று.

வேறென்ன‌...ப‌கிர்வுக‌ள் தொட‌ரும்.

பிகு : இசை அறிவு ஏதுமில்லாது ., நான் அனுப‌வித்த‌ திருவையாற்றை அந்த‌ ஆனந்த‌ உற்ச‌வ‌த்தை ப‌ற்றி நீங்க‌ளும் அறிந்து கொள்ள‌ வேண்டும் என்ற‌ ஆசையில் இட‌ப்ப‌ட்ட‌ ஒரு ப‌கிர்வு ம‌ட்டுமே.

வ‌ருடா வ‌ருட‌ம் ஜ‌ன‌வ‌ரியில் ம‌ட்டுமே இத் திருவிழா. பொதிகையும் , ஆல் இன்டியா ரேடியாவும் உற்ச‌வ‌த்தை நேர‌டி ஒளிப‌ர‌ப்பு செய்ய‌ த‌வ‌றுவ‌தில்லை.

க‌ட‌ந்த‌ சில‌ வ‌ருட‌ங்களாக‌ ஜெயா டீவியும் இந் நிக‌ழ்ச்சிக‌ளை ஒளிப‌ர‌ப்ப‌ வ‌ருகிற‌து.

ஆவுடையார் கோவில்... : புதுகோட்டை மாவட்டம்

நமச்சிவாய வாழக...
நாதன் தாள் வாழ்க...
இமை பொழுதும் என் நெஞ்சில்...
நீங்காதான் தாள் வாழ்க...
------------------------ என மாணிக்க வாசகர் அரற்றிய இடம்!
திருவாசகம்... எனும் அழகு தமிழ் பாடல்கள் உருவான இடம்.

அவர் 8 அல்லது 10 ஆம் நூற்றாண்டில் வாழந்த போது கட்டிய கோயில் என்று கூறப்படுகிறது.

சரி இப்ப இந்த கோவிலை பற்றி நான் எழுத வேண்டிய அவசியம் என்ன ?

தமிழக கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்புடையன என்ற போதும்... இந்த கோயில் சிறப்புகளின் சிகரம் என்றே கூற வேண்டும்.

பொதுவாய் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த நான்., சிறந்த கோயில்கள் என்றால் தஞ்சை,குடந்தை,சீர்காழி என காவிரி ஆறு பாயும் கரைகளில் மட்டும் என்று எண்ணி கொண்டு இருந்தேன்.இந்த கர்வம் புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலை தரிசித்த பொழுது தவிடு பொடியானது.

இனி கோவிலை பற்றி...

இந்த கோயில் " தென்னா டுடைய சிவனே போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி " என்று பாடிய‌ மாணிக்க வாசகரால் கட்டபட்டது.

மாணிக்க வாசகர் பாண்டிய மன்னனின் அமைச்சர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ( ஷாஜகான் போல் இவர் மன்னரில்லை).

இந்த கோவிலில் கணபதிக்கு பதில் மாணிக்க வாசகரை தொழுதே உள் செல்லும் பழக்கம் இந்த கோவிலின் முதல் அதிசயம். (முதல் வணக்கம் விநாயகருக்கு இல்லை).

கோயிலின் முகப்பிலேயே உள்ள‌ சிற்பங்களும் ஓவியங்களும் மாமல்லபுரம் எல்லாம் சும்மா என்ற எண்ணத்திற்க்கு எனை கொண்டு வந்தன.

அந்த முகப்பு மண்டப்த்தின் ஓவியங்கள் அதி உன்னதாமனவை.

அது போல் அந்த கோவிலின் சிறப்ங்களின் தலை முடி கூட சீராக செதுக்க பட்டு இருப்பது கண்டு சிலாகித்து போனேன்.

அது மட்டுமல்ல., ஒரு மல்லனின் கால் ,அவர் காலில் உள்ள செருப்பு ,அவர் காலில் உள்ள ரத்த நாளாங்கள் கூட விட்டுவிடாது கல்லில் செதுக்க முடியுமாயின் இதை என்னவென்று சொல்ல... ?

குறத்தி அவளின் கூடை அவளின் தலை பின்னல், அவள் மென்மை, ஆடை போன்றவை அச்சு அசலாக அழகாய் கல்லில் கொண்டு வர எத்துனை பொறுமை வேண்டும். நிஜமாய் இந்த சிலை காண்பதற்கென்றே குறைந்தது பத்து நிமிடங்களாவது ஒதுக்க வேண்டும் என்ப்து என் கோரிக்கை.

கேன்டி லிவர் என்று சொல்ல கூடிய, பில்லர் சப்போர்ட் இல்லாது, மேற்கூறை இழுத்து, மண்டபங்கள் செய்யபட்ட்ருப்பது மிக மிக அற்புதம்.

கற் சங்கிலிகள் பல கோவிலகளில் நீங்க பார்திருந்த போதும் இவை அழகின் உச்சம். (கல்லால் செய்யபட்ட சங்கிலிகள் : கட்டிட கலையில் மிகக் கடினமான ஒன்று)

ராசி சக்கரங்கள் மேற் கூறையில் மிக அழகாய் செதுக்க பட்டு இருக்கிறது.அதனருகில் கற் சங்கிலிகள் அதுவும் பேரழகு)

கொடுங்கை என்று சொல்லபடும் கற்களை மரம் போல் ,சுதை சிற்பம் போல் ( சுண்ணாம்பு சிற்பம்) வளைத்தும் நெளித்தும் செய்யபட்ட மேற்கூரைகளை காண கண் கோடி வேண்டும். சர்வ நிச்சயமாய் இவை எப்படி அந்த காலத்தில் சாத்தியமாயிற்று எனபது என் மனதின் விடை தெரியாத கேள்வி.

சிற்பங்களை பற்றி ஒன்றும் தெரியாதவர் கூட அல்லது ஆர்வமில்லாதவர் கூட ஒரு தடவை இந்த கோயிலுள் போய் வருவார் எனில் வாயடைத்து போவார்.

தந்தை பெரியார் கூட இந்த கோவிலில் நுழைந்து வாயடத்து போனது தற்கால வரலாறு.

இன்னும் எத்தனை எத்தனையோ அதிசய்ங்கள் இந்த கோயிலில் தல வரலாறு நோக்கில்... அவை முக்கியமில்லை எனினும்....பரியை நரியாக்கியது.

புழுங்கல் அரிசி சாதம் படைப்பது.

மாணிக்க வாசகரே உற்சவ மூர்த்தி ( சிவன் இல்லை)

ஆவுடை மாத்திரமே உண்டு (லிங்கம் இல்லை).லிஙக்த்திற்க்கு பதிலாய் ஒரு செம்பு போன்ற பாத்திரத்தினை கவிழ்த்து இருக்கிறார்கள்.

மேலும் கொடி மரம் இல்லை.

பலி பீடம் இல்லை.

நந்தி இல்லை. இறைவனை வெளியிலிருந்து தரிசிப்போர்க்கு எந்த தடையும் இல்லை.

இது போல அதிசயங்கள் ஏராளம்.

என் கர்வம் அழித்த சோழ/பாண்டிய தேசத்து எல்லையில், வெள்ளாறங்கரையில் அமைந்த அற்புத கோயில் இது.சிற்ப கலையில் ஆர்வம் உள்ளோரும் அல்லது சிறப கலை என்றால் என்ன என்று கேட்போரும் அவசியம் செல்ல வேண்டிய கோயில்.

வேறென்ன....

நம்சிவாய வாழ்க...
நாதன் தாள் வாழ்க...
இமை பொழுதும் என் நெஞ்சில்...

பிகு : இந்த கோயில் பூதத்தால் கட்டபட்ட கோவில் என்றும் நம்மப் படுகிறது. அதை நம்பாது நான் மனித உழைப்பின் உச்சத்தினை அங்கு கண்டேன்.அதாலால் பகிர்ந்தேன்!!! பகிர்வுகள் தொடரும்...

தாஜ் மகால்...!!!

தாஜ் மகால்...!!!

என்னை பாதித்த மிக முக்கிய காதல் சின்னம்.

தாஜ் மகால் சின்ன வயதிலிருந்து போட்டோவிலும் சினிமாவிலும் பார்த்த கட்டிடம் தான். நேரில் கண்ட போது மிக பிரம்மாண்டமாய் என ஈர்த்தது. அதன் புகழ் உலகு அறியும்.

ஆப்கானிஸ்தானிலிருந்து கொன்டு வரப்பட்ட வெள்ளை கற்களை (மார்பிள்ஸ்) கொண்டு ஆக்ராவில் யமுனை நதி ஓரமாய் அற்புதமாய் வடிவமைக்கபட்ட ஒரு கல்லறை கட்டிடம்/பொக்கிஷம்.

ஐந்தாறு விஷயங்கள் அதில் மிக முக்கியம்.

அவை...

ஒன்று தாஜ்மகாலின் பரப்பளவு சில பல ஏக்கர்கள்.

இரண்டாவது., நதியோரம் கட்டிடம் கட்டும் பொழுது ஏறபடும் சிரமங்கள், அதை அவர்கள் எதிர் கொண்ட விதம்.தண்ணீர் ஊறுவதை தவிர்க்க இயலாமல் அவர்கள் " வேல் பவுண்டேசன் " எனும் புதய கட்டிட முறைமையை உலகுக்கு தந்தது.அதாவது கிணறுகள் தோண்டி அதன் மேல் தாஜ் மகாலை அமர வைத்ததது சாதனை.

மூன்றாவது ., அந்த வெள்ளை கற்கள்... கிட்ட தட்ட ஆயிரம் கிலே மீட்டர் தொலைவில் (ஆப்கானிஸ்தான்) இருந்து எடுத்து வரப்பட்டவை.

நான்கவது ., இன்று வரை கருக்காது அழகாய் மிளிரும் அழகு. பெளர்ணமி வெளிச்சத்தினை அப்படியே உள் வாங்கி மிளிரகூடிய அற்புத தன்மை.

ஐந்துதவது ., செமி பீரிசியஸ் ஸ்டோன்ஸ் என்று சொல்ல கூடிய முத்து ,பவளம் ,கோமேதகம் போன்ற கற்கல் கொண்ட மிக அழகிய வேலைபாடுகள். எங்களை வழி நடத்தி சென்ற கைடு அந்த கற்கள் பதிக்க பட்ட பகுதியில் டார்ச் அடித்து காண்பித்த போது சிலிர்த்து போனோம்.அத்துனை அழகாய் மின்னியது.

ஆறாவது ., கிட்டதட்ட இருபது லட்சம் பொற்காசுகள் அதற்க்கு செலவானாதக வராலாறு கூறுகிறது.

அதுமட்டுமல்லது தாஜ்ம்காலின் இரு பகுதியிலும் மாமன்னர் ஷாஜகான் தங்குவத்ற்க்கு ஒரு அரண்மனையும் அது போலவே அச்சு பிறழாமல் இன்னொரு அரண்மனையும் தாஜ்மகாலை கட்டிய வல்லுனருக்காக‌ கட்ட பட்டிப்பது சிறப்பு.

சரி இதெல்லம் எதுக்கு சொல்றிங்க என்று நீங்கள் கேட்க கூடும்.
இத்துனை செலவு செய்து ஒரு உலக அதிசயத்தினை உருவாக்கியது

காதலுக்காக... அந்த காதலுக்கு உரியவர்... மும்தாஜ்.

.........

அந்த காதலுக்கு உரியவர்... மும்தாஜ்.

மும்தாஜ் ஷாஜகானுக்கு நான்காவது மனைவி.

முதல் கணவனால் விவகரத்து ஆனவர். ( ஷாஜகான் இரண்டாவது கணவர்)

ஷாஜகானுக்கும் மும்தாஜ்க்கும் பிறந்த குழந்தைகள் மொத்தம் 14 .

மும்தாஜ் இறந்தது அவரது 38 வது வயதில்.

இப்பொழுது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

எத்துனை காதல்... அந்த மாமன்னனுக்கு...!!!
எத்துனை ப்ரியம்... அந்த ஷாஜகானுக்கு...!!!

மன்னனின் எல்லை அப்பொழுது ஆப்கானிஸ்தானிருந்து தெற்கே ஹைத்ராபாத் வரை விரிந்திருக்க எத்துனை பெண்களை வேண்டுமானாலும் மணந்திருக்க முடிய்ம்.

அப்படி இருக்க...!!!

ஷாஜகானின் அந்த தாஜ்மகால்... அற்புதம் தானே !

தாஜ் மகால் ஒரு உண்மை காதலின் ஒளி.
உலகேங்கிலும் காதலுக்கான ஒரு அற்புத சின்னம்.

என்னை பாதித்த மிக முக்கிய காதல் சின்னம்.

பி.கு. :தகவல்களில் ஒரு சில தவறு இருக்கலாம். ஆனால் ஷாஜகானின்
காதல் மிக உயர்வான விஷயம்.
வேறென்ன‌.... எழுதுவோம் !